பயிற்சிப் பட்டறை
தங்கள் பிள்ளைகளுக்குத் தாய் மொழிக் கல்வி அறிவை ஊட்டவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு சிரமம் பாராது இந்தப் போட்டியில் தங்கள் பிள்ளைகளைப் பங்குபற்ற வைத்த பெற்றோருக்கும், பங்கு பற்றிய மாணவர்களுக்கும், அவர்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் தந்த ஆசிரியர்களுக்கும் முதற்கண் நன்றிகளைக் கூறிக் கொள்கிறோம். அடுத்த தலைமுறையினரிடம் எங்கள் தாய் மொழியாம் தமிழ் மொழியை எடுத்துச் செல்லும் இவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
|
Tamil Contest Exam |
ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் நடத்திய தமிழ் மொழி திறன் காண் போட்டியின் போது பங்குபற்றிய மாணவர்களில் ஒரு பகுதியினர்.
|
Principal Mr.P. Kanagasabapathy and Teachers |
பல வருடங்களுக்குமுன் கனடாவில் தமிழ் மொழியை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வழி வகுத்தவர்களில் ஒருவரான முன்னால் மகாஜனாக் கல்லூரி அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்களுடன் தன்னார்வத் தொண்டர்களாகப் பங்குபற்றிய சில ஆசிரியர்கள்.
|
Teachers East and West |
பல சமூகப் பிரமுகர்கள் போட்டி மண்டபத்திற்கு வந்து பெற்றோர், மாணவர், தன்னார்வத் தொண்டர்களாகக் கடமையாற்றிய ஆசியர்கள் சமூக அங்கத்தவர்கள் எல்லோரையும் பாராட்டி ஆக்கமும் ஊக்கமும் கொடுத்திருந்தனர்.
சுமார் 1800 மாணவர்களுக்கு மேலாக இந்தப் போட்டிக்கு விண்ணப்பித்திருந்தனர். மேற்குக் கிழக்கு என்று இரண்டு பிரிவாக இந்தப் போட்டி இருதினங்களாக நடைபெற்றது.
|
Student Registration |
ஒன்ராறியோ ஆசிரியர் சங்கத் தலைவர் குரு அரவிந்தன் (2011-2012) பரிசளிப்பு விழாவின் போது பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் சங்கத்தின் தேவை, அதன் வளர்ச்சி பற்றி உரையாற்றுகின்றார்.
|
ONTTA President Writer Kuru Aravinthan (2011-2012) |
ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் நடத்திய தமிழ் மொழித் திறன் காணல் போட்டியின்போது தன்னார்வத் தொண்டர்களாக வந்து கலந்து சிறப்பித்தமைக்காக ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
|
Paper Correction |
எங்கள் மொழி இனம் பண்பாடு கலாச்சார வளர்ச்சிக்காக தங்கள் பொன்னான நேரத்தைத் செலவிட்டதற்காகப் பாராட்டுகின்றோம். தங்களைப் போன்றவர்களின் சேவை மனப்பான்மை இருக்கும்வரை எங்கள் இனமும், மொழியும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும் என்று உறுதியாக நம்புகின்றோம்.
No comments:
Post a Comment