Friday, 23 March 2012

ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம்

வணக்கம்.

ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் நடத்திய தமிழ் மொழித் திறன் காணல் போட்டியின்போது தன்னார்வத் தொண்டர்களாக வந்து கலந்து சிறப்பித்தமைக்காக ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். எல்லா விதத்திலும் உதவியாக இருந்த பெற்றோருக்கும், மாணவர்களுக்கும், ஊடகங்களுக்கும் இச் சந்தர்ப்பத்தில் நன்றி கூறுகின்றோம். எங்கள் மொழி இனம் பண்பாடு கலாச்சார வளர்ச்சிக்காக தங்கள் பொன்னான நேரத்தைத் செலவிட்டதற்காகப் பாராட்டுகின்றோம். தங்களைப் போன்றவர்களின் சேவை மனப்பான்மை இருக்கும்வரை எங்கள் இனமும், மொழியும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும் என்று உறுதியாக நம்புகின்றோம்.
 
முடிவுகள் வெகுவிரைவில் வெளியிடப்படும்.
ontta.org

http://ontta.org
 

No comments:

Post a Comment