Friday, 18 November 2011

Ontario Tamil Teachers Association - தமிழ் மாணவர்களுக்கான போட்டிகள்

தமிழ் மாணவர்களுக்கான போட்டிகள்

ஒன்ராரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் நடத்திய தமிழ் மாணவர்களுக்கான போட்டிகள் சென்ற சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் ரொறன்ரோவில் நடைபெற்றன. பாலர் கீழ்ப்பிரிவு தொடக்கம் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நூற்றுக்கணக்காக இந்தப் போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.

மாணவர்களின் வசதிக்காக சென்ற சனிக்கிழமை எத்தோபிக்கோவிலும், ஞாயிற்றுக்கிழமை ஸ்காபரோவிலும் இப்போட்டிகள் நடைபெற்றன. பெற்றோர், ஆசிரியர், உயர்வகுப்பு மாணவர்கள் ஆகியோர் தன்னார்வத் தொண்டர்களாகக் கலந்து கொண்டு போட்டி சிறப்பாக நடைபெற உதவினார்கள். தமிழில் வாசித்தல், சொல்வது எழுதுதல், படம் பார்த்து எழுதுதல், போன்ற பல பிரிவுகளாகப் போட்டிகள் இடம் பெற்றன.


புலம்பெயர்ந்த மண்ணில் தாய் மொழியாம் தமிழ் மொழி அழிந்து போகாமல் பேணிக்காப்தில் ஒன்ராரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் முன்னின்று உழைப்பது யாவரும் அறிந்ததே. கட்டணம் எதுவுமின்றி இலவசமாக இந்தப் போட்டியை நடத்துவதற்கு பொருளுதவி தந்து உதவிய அனைவருக்கும் சங்கத்தின் சர்ரபில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.


போட்டியின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இங்கே காணலாம்:

No comments:

Post a Comment