Wednesday, 21 December 2011

OTTA - ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம்

ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம்




ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் சமீபத்தில் நடத்திய ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறையின் போது பல தமிழ் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஸ்காபரோவிலும், பிராம்டனிலும் இந்தப் பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்றன. இப் பயிற்சிப் பட்டறையின்போது கலந்துரையாடலும் இடம் பெற்றது. அக் கலந்துரையாடலில் பல பயனுள்ள விடையங்கள் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.


ரொறன்ரோ கல்விச்சபையைச் சேர்ந்த திருமதி பெனி அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றபோது ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தினர் அவரது சேவையைப்பாராட்டி விருது கொடுத்து மலர் மாலை அணிந்து கௌரவித்தனர். திருமதி பெனியுடன் தமிழ் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த சில அங்கத்தவரையும் காணலாம்







OTTA - ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம்

ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம்



ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் சமீபத்தில் நடத்திய ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறையின் போது பல தமிழ் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஸ்காபரோவிலும், பிராம்டனிலும் இந்தப் பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்றன. இப் பயிற்சிப் பட்டறையின்போது கலந்துரையாடலும் இடம் பெற்றது. அக் கலந்துரையாடலில் பல பயனுள்ள விடையங்கள் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.


ரொறன்ரோ கல்விச்சபையைச் சேர்ந்த திருமதி பெனி அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றபோது ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தினர் அவரது சேவையைப்பாராட்டி விருது கொடுத்து மலர் மாலை அணிந்து கௌரவித்தனர். திருமதி பெனியுடன் தமிழ் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த சில அங்கத்தவரையும் காணலாம்.











Thursday, 15 December 2011

ஆசிரியர் பயிற்சிப் பட்டறை - Workshop.

ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் 

டிசம்பர் ,  17ம் திகதி (12/17/2011) சனிக்கிழமை அன்று நான்கு மணியளவில்

ஆசிரியர் பயிற்சிப்  பட்டறை ஒன்றை  நடத்தவுள்ளோம்.

- தற்போதைய கற்பித்தல் கருப்பொருள் (Theme)

- வகுப்பறைச்  சிக்கல்களும் தீர்வுகளும் (தற்போதைய சவால்கள்)

இத் தலைப்புகளோடு ஆசிரியர் நலன் பற்றிய சிறப்புக் கலந்துரையாடலும் நடைபெறும்.

கலந்துரையாடலின்போது உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.
 
தமிழ் மாணவர்களின் நலன் கருதி, ஒன்ராறியோ கல்விச்சபைகளில் (உதாரணமாக: TDSB, PEEL, YORK AND CATHALIC BOARD)  கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களை இந்தப் பட்டறையில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அன்றையநாள் நீங்கள் விரும்பினால் ஒன்ராரியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தில் அங்கத்தவராகவும் 
இணைந்து கொள்ளலாம். புதியவர்களையும்  அழைத்து வாருங்கள்.



நேரம் : பி.ப 4:00  மணி தொடக்கம் 6:00 மணி வரை


இடம் : 8889 The Gore Road
             Jaipur Gore Plaza
             Unit 25
             Brampton, On  L6P 1G6
             Main Intersection : Queen Street E & The Gore Rd.

Website : http://www.ontta.org/
            
         

Monday, 5 December 2011

CONTEST - தமிழ்மொழித்திறன் போட்டி - 2011 / 12

பெற்றோர்களே, மாணவர்களே,

தமிழ்மொழித்திறன் போட்டி - 2011 / 12
கனடிய ஒன்ராறியோ அரசைச் சார்ந்த கல்விச்சபைகளில் தமிழ்மொழி கற்றுவரும் மாணவர்களின் நலனை நோக்காகக் கொண்டு  பல்பண்பாட்டுச் சூழலில் தாய்மொழிக்கல்விக்கு அரசு சார்ந்த கல்விச்சபைகள் முதன்மை கொடுத்து வருகின்றன. அந்த வாய்ப்பினை மாணவர் முழுமையாகப் பயன்படுத்தவும் தாய்மொழி கலை பண்பாடு போன்றவற்றில் மாணவர் தமது ஆற்றலை வெளிப்படுத்தவும் ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் உதவி வருகின்றது. அத்துடன் ஆண்டுதோறும் இச் சங்கம் மாணவர்களுக்கிடையேயான இலவசமான மொழித்திறன் போட்டிகளையும் ஆசிரியர் கருத்தரங்குகளையும் நடத்திவருகின்றது.

ஒன்ராறியோ கல்விச் சபையில் கல்வி கற்கும் மாணவர்களின் போட்டிக்கான விண்ணப்ப முடிவுநாள்

எதிர்வரும் (31-12-2011) டிசம்பர் 31ம் திகதியாகும்.

இந்த நாளுக்கு முன்பாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.  இணையத்தளத்தில் காணப்படும் (ontta.org - online) விண்ணப்பத்தை நீங்கள் எளிதாக நிரப்பியனுப்ப முடியும்.

தேவையெனில் நீங்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் (downlord) செய்துகொள்ளலாம்.

பத்திரத்தை உங்கள் தமிழ் ஆசிரியரிடம் கையளிக்கலாம்.

போட்டிகளுக்கான சொற்கள் வாசிப்புப் பகுதிகள் எழுதுதல் போட்டிக்கான விபரங்கள் என்பன 

இத்தளத்தில் http://ontta.org  இணைக்கப்பட்டுள்ளன.

ஒன்ராறியோ தமிழாசிரியர் சங்கத்தின் பணிகள் மேலும் சிறப்புற உங்கள் அனைவரது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கின்றோம்.



Wednesday, 23 November 2011

ontta.org - Web Site - ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம்.

ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம். -

http://www.ontta.org/

போட்டிக்கான பதிவுகள் இப்போது இணையத் தளத்தில்.

இக்கல்வியாண்டில் நடைபெறவிருக்கும் போட்டிகளுக்கான பதிவுகளை நீங்கள் இப்போது எமது இணையத்தளம் வாயிலாக மேற்கொள்ளலாம். இணையத்தளத்தில்  இருக்கும் இணைய விண்ணப்பப்படிவம் என்பதை அழுத்தினால் உங்களுக்கான விண்ணப்பம் தோன்றும். மிக இலகுவாக அந்த விண்ணப்பத்தை நிறைவு செய்யமுடியும். முழுமையாக நிறைவுசெய்து உடன் அனுப்பி வையுங்கள்.

போட்டியாளர் விபரம் எனும் பகுதியினூடாக உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றதா என்பதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளமுடியும்.

போட்டி பற்றிய அனைத்து விபரங்களும் இணையத்தளம் வாயிலாகவே அனைவருக்கும் அறியத்தரப்படும். கடந்த காலங்களைப் போன்று தொலைபேசி வாயிலாக போட்டி விபரங்கள் அறியத்தரப்படமாட்டா.

போட்டிக்குரிய சொற்கோர்வைகள், வாசித்தற்பகுதிகள், எழுத்துப்போட்டிகள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் இந்த இணையத்தளத்திலேயே நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக விபரங்கள் தேவையாயின் மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள். அல்லது உங்கள் தமிழ் ஆசிரியர்களிடம் கேட்டுப்பெற்றுக்கொள்ளுங்கள்.

இணைய முகவரி: www.ontta.org

புதிய இணையத்தள சேவை - ontta.org

Ontario Tamil Teachers Association - Web Site. 

 
ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் புதிய இணையத்தள சேவை

கனடிய ஒன்ராறியோ அரசைச் சார்ந்த கல்விச்சபைகளில் தமிழ்மொழி கற்றுவரும் மாணவர்களின் நலனை நோக்காகக் கொண்டு இச்சங்கம் உருவாக்கப்பட்டது. பல்பண்பாட்டுச் சூழலில் தாய்மொழிக்கல்விக்கு அரசு சார்ந்த கல்விச்சபைகள் முதன்மை கொடுத்து வருகின்றன. அந்த வாய்ப்பினை மாணவர் முழுமையாகப் பயன்படுத்தவும், தாய்மொழி கலை பண்பாடு போன்றவற்றில் மாணவர் தமது ஆற்றலை வெளிப்படுத்தவும், இச்சங்கம் உதவி வருகின்றது. அத்துடன் ஆண்டுதோறும் இச் சங்கம் மாணவர்களுக்கிடையேயான மொழித்திறன் போட்டிகளையும் ஆசிரியர் கருத்தரங்குகளையும் நடத்திவருகின்றது.

ஒன்ராறியோ கல்விச் சபையில் கல்வி கற்கும் மாணவர்களின் போட்டிக்கான விண்ணப்ப முடிவுநாள்
எதிர்வரும் டிசம்பர் 10 திகதியாகும். இந்த நாளுக்கு முன்பாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த இணையத்தளத்தில் காணப்படும் (online) விண்ணப்பத்தை நீங்கள் எளிதாக நிரப்பியனுப்ப முடியும்.
தேவையெனில் நீங்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் ((downlord) செய்துகொள்ளலாம்.
பத்திரத்தை உங்கள் தமிழ் ஆசிரியரிடம் கையளிக்கலாம்.

போட்டிகளுக்கான சொற்கள், வாசிப்புப் பகுதிகள், எழுதுதல் போட்டிக்கான விபரங்கள் என்பன விரைவில் இத்தளத்தில் இணைக்கப்படவுள்ளன.

ஒன்ராறியோ தமிழாசிரியர் சங்கத்தின் பணிகள் மேலும் சிறப்புற உங்கள் அனைவரது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கின்றோம்.


 http://www.ontta.org

www.ontta.org  என்ற இணையத்தளத்தில் விபரங்களை அறிந்து கொள்ளவும்.



Friday, 18 November 2011

Ontario Tamil Teachers Association - தமிழ் மாணவர்களுக்கான போட்டிகள்

தமிழ் மாணவர்களுக்கான போட்டிகள்

ஒன்ராரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் நடத்திய தமிழ் மாணவர்களுக்கான போட்டிகள் சென்ற சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் ரொறன்ரோவில் நடைபெற்றன. பாலர் கீழ்ப்பிரிவு தொடக்கம் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நூற்றுக்கணக்காக இந்தப் போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.

மாணவர்களின் வசதிக்காக சென்ற சனிக்கிழமை எத்தோபிக்கோவிலும், ஞாயிற்றுக்கிழமை ஸ்காபரோவிலும் இப்போட்டிகள் நடைபெற்றன. பெற்றோர், ஆசிரியர், உயர்வகுப்பு மாணவர்கள் ஆகியோர் தன்னார்வத் தொண்டர்களாகக் கலந்து கொண்டு போட்டி சிறப்பாக நடைபெற உதவினார்கள். தமிழில் வாசித்தல், சொல்வது எழுதுதல், படம் பார்த்து எழுதுதல், போன்ற பல பிரிவுகளாகப் போட்டிகள் இடம் பெற்றன.


புலம்பெயர்ந்த மண்ணில் தாய் மொழியாம் தமிழ் மொழி அழிந்து போகாமல் பேணிக்காப்தில் ஒன்ராரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் முன்னின்று உழைப்பது யாவரும் அறிந்ததே. கட்டணம் எதுவுமின்றி இலவசமாக இந்தப் போட்டியை நடத்துவதற்கு பொருளுதவி தந்து உதவிய அனைவருக்கும் சங்கத்தின் சர்ரபில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.


போட்டியின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இங்கே காணலாம்:

Tuesday, 8 November 2011

OTTA - தமிழ் விண்ணப்பப்படிவம்

ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் வருடம் தோறும் நடத்தும் தமிழ் மொழித் தேர்வில் பங்குபெற விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப் பத்திரம் கீழே தரப்பட்டுள்ளது. ஒன்ராறியோ கல்விச்சபையில் கல்வி கற்கும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதியோடு பாடசாலைகள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
டிசம்பர் 10ம் திகதிக்கு முன்பாக விண்ணப்பங்கள் எமக்குக் கிடைக்க வேண்டும்
2011, டிசம்பர் 10ம் திகதிக்கு முன்பாக விண்ணப்பங்கள் எமக்குக் கிடைக்க வேண்டும்




OTTA - Application Form - English


Ontario Tamil Teachers Association
The ontario Tamil Teachers Association is conducting competitions for Tamil Language students from JK tp Gr - 8, who are enrolled through the Board of Education of Toronto, Peel, and York Region. The Competitions are divided into the following categories:
Spelling
Reading
Writing
The application should reach the Association on or before December 10, 2011.

Sunday, 30 October 2011

தமிழ் மொழித்திறன் போட்டி - OTTA

தமிழ் மொழித்திறன் போட்டி - 2010 / 11

சென்ற 11ம் திகதி சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில் ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் நடத்திய தமிழ் மொழித்திறன் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா ரொறன்ரோவில் உள்ள 635, மிடில் பீல்ட் வீதியில் உள்ள ஐயப்பன் கோவில் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ரொறன்ரோ கல்விச்சபையின் சர்வதேச மொழித்திட்ட பிரிவைச் சேர்ந்த திருமதி சறோ ஜெகநாதன் மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். பொன்னையா விவேகானந்தனும் பிரிந்தா செந்தில்நாதனும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள்.



தமிழ் தாய் வாழ்த்து, கனடா தேசிய கீதம், அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து குமுதினி ஸ்ரீஸ்கந்தராஜாவின் மாணவிகளின் வரவேற்பு

நடனம் இடம் பெற்றது. அடுத்து ஆசிரியர் சரோஜா பாலகாந்தனின் வரவேற்புரை இடம் பெற்றது. தொடர்ந்து ஆசிரியர் யோகா பத்மநாதனின் ஆக்கத்தில் அபிநயப்பாடல் இடம் பெற்றது. அடுத்து கீர்த்திகா கலாநிதி செபஸ்டினா கலாநிதி ஆகியோரின் கண்ணன் பாட்டும், டொறிஸ் மதனராஜாவின் ஆக்கத்தில் அபிநயப்பாடலும் இடம் பெற்றன.

மாணவன் சுபவீன் பவானந்தனின்

பாடலைத் தொடர்ந்து ஆசிரியரும் சங்கச் செயலாளருமான ஸ்ரீரஞ்சனா சிவகுமாரனின் ஆக்கத்தில் கடவுள் தந்த அழகிய வாழ்வு என்ற உரைச்சித்திரம் இடம் பெற்றது.

சங்கத் தலைவர் திருமதி வசந்தாதேவி தர்மசீலனின் தலைமை உரையைத் தொடர்ந்து அவரது ஆக்கத்தில் கிராமிய நடனம் இடம் பெற்றது.

தொடர்ந்தும் ஆசிரியர் குமுதினி ஸ்ரீஸ்கந்தராஜாவின் ஆக்கத்தில் நடனமும், பொன்னையா விவேகானந்தனின் ஆக்கத்தில் தமிழ்ப்பெரியார் பற்றிய உரைச்சித்திரமும் இடம் பெற்றது.

தொடர்ந்து போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்கள் பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். பெற்றோர்கள் மிகவும் ஆர்வத்தோடு தங்கள் பிள்ளைகளையும் அழைத்து வந்து இந்த நிகழ்வில் பங்கு பற்றிச் சிறப்பித்தனர்.






இந்த நிகழ்வில் ரொறன்ரோ கல்விச்சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Saturday, 29 October 2011

ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம்



                                                                     வணக்கம்.

ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

Welcome to Ontario Tamil Teachers Association.