Sunday 30 October 2011

தமிழ் மொழித்திறன் போட்டி - OTTA

தமிழ் மொழித்திறன் போட்டி - 2010 / 11

சென்ற 11ம் திகதி சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில் ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் நடத்திய தமிழ் மொழித்திறன் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா ரொறன்ரோவில் உள்ள 635, மிடில் பீல்ட் வீதியில் உள்ள ஐயப்பன் கோவில் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ரொறன்ரோ கல்விச்சபையின் சர்வதேச மொழித்திட்ட பிரிவைச் சேர்ந்த திருமதி சறோ ஜெகநாதன் மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். பொன்னையா விவேகானந்தனும் பிரிந்தா செந்தில்நாதனும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள்.



தமிழ் தாய் வாழ்த்து, கனடா தேசிய கீதம், அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து குமுதினி ஸ்ரீஸ்கந்தராஜாவின் மாணவிகளின் வரவேற்பு

நடனம் இடம் பெற்றது. அடுத்து ஆசிரியர் சரோஜா பாலகாந்தனின் வரவேற்புரை இடம் பெற்றது. தொடர்ந்து ஆசிரியர் யோகா பத்மநாதனின் ஆக்கத்தில் அபிநயப்பாடல் இடம் பெற்றது. அடுத்து கீர்த்திகா கலாநிதி செபஸ்டினா கலாநிதி ஆகியோரின் கண்ணன் பாட்டும், டொறிஸ் மதனராஜாவின் ஆக்கத்தில் அபிநயப்பாடலும் இடம் பெற்றன.

மாணவன் சுபவீன் பவானந்தனின்

பாடலைத் தொடர்ந்து ஆசிரியரும் சங்கச் செயலாளருமான ஸ்ரீரஞ்சனா சிவகுமாரனின் ஆக்கத்தில் கடவுள் தந்த அழகிய வாழ்வு என்ற உரைச்சித்திரம் இடம் பெற்றது.

சங்கத் தலைவர் திருமதி வசந்தாதேவி தர்மசீலனின் தலைமை உரையைத் தொடர்ந்து அவரது ஆக்கத்தில் கிராமிய நடனம் இடம் பெற்றது.

தொடர்ந்தும் ஆசிரியர் குமுதினி ஸ்ரீஸ்கந்தராஜாவின் ஆக்கத்தில் நடனமும், பொன்னையா விவேகானந்தனின் ஆக்கத்தில் தமிழ்ப்பெரியார் பற்றிய உரைச்சித்திரமும் இடம் பெற்றது.

தொடர்ந்து போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்கள் பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். பெற்றோர்கள் மிகவும் ஆர்வத்தோடு தங்கள் பிள்ளைகளையும் அழைத்து வந்து இந்த நிகழ்வில் பங்கு பற்றிச் சிறப்பித்தனர்.






இந்த நிகழ்வில் ரொறன்ரோ கல்விச்சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment